செவ்வாய், 19 மே, 2020

மனிதாபிமானம்


புலம்பெயர் தொழிலாளிகள்
      அடிமேல் அடிவைத்து
ஆயிரம் மைல்கள் நடந்தார்கள்

ஒவ்வொரு அடியிலும்
      நசுங்கி செத்தது
மனிதாபிமானம்

கொரோனாயணம்


தூணிலும் இருப்பேன்
துரும்பிலும் இருப்பேன்
என்றான் கடவுள்

தும்மலிலும் இருப்பேன்
தொண்டையிலும் இருப்பேன்
என்றார் கொரோனா

நம்மளை கை கழுவ சொன்ன 
அரசாங்கம்
நம்மளை கை கழுவியது

நம்ம வீட்டிலே இருந்தால்
கோரோனா வீதியில்  இருக்கும்
நாம் வீதிக்கு வந்தால்
கொரோனா நம் வீட்டுக்கு  வரும்

மாடத்தில் விளக்கு ஏத்த
நம்ம வீட்டில் எரிந்த விளக்கை
அணைக்க சொன்னார்
   
சத்தமா சாப்பாட்டு தட்டை
தட்ட சொல்லி
சத்தமில்லாமல் நம்மக்கு
திருஓட்டை தந்துசென்றார்

ஊரெல்லாம் அடங்கிக்கிடந்தது
தெருவெல்லாம் முடங்கிக்கிடந்தது
சாதி  வெறி முழித்தே இருந்தது

தேசிய ஊரடங்கில் பணக்காரர்கள்
ராமாயணம் பார்த்தார்கள் 
ஏழைகள் பசியை தின்றார்கள்

வறுமையோடு வாழ்பவர்களை
வைரஸ் சாகும்வரை
வைரசோடும் வாழ சொன்னார்கள்
   
புலம்பெயர்ந்த தொழிலாளிகள்
நடை பிணங்களாக சாலைகளில்
நாய்குட்டிகளுக்கு விமானம்சேவை

ஊருக்குள்ளே நல்ல ஊர்
எங்க ஊர்
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்க நாடு

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

ஒரு பூவின் மரணம்

காலையில் பூத்துக் குலுங்கியது மரம்
    மாலையில் பூமியில் கிடப்பவையெல்லாம்
புண்ணைமரத்தின் பூக்கள்
    பூக்களின் ஒவ்வொரு இதழ்களிலும் பூரிப்பு
மிச்சமில்லா வாழ்க்கையின் மகிழ்ச்சி
    ஒரு நாள் வாழ்ந்தாலும் நிறைவனது
பூக்கள் எல்லாம் சொல்லும்
    இறப்பு வலியில்லா சுகம்
மரணம் முடிவில்லா நிறைவு
    பூக்கள் ஒவ்வொன்றும் தென்றலை சுவாசித்தன
சூரியனோடு சுகமாயிருந்தன
    மொட்டிலிருந்து மலரும்போது கிழற்சி
மரத்திலிருந்து பிரியும்போது மகிழ்ச்சி

என்னவளே



செக்க செவந்த புள்ள
      செம்பருத்தி பூப்போல
பக்கத்தில வந்தாலே
      சொக்குதம்மா ஆளை
நித்தம் நித்தம் உன் நினைப்பு
      தித்திக்குமே என் நெஞ்சிலே
முத்துமுத்தாய் உன் பேச்சு
      முத்தமாய் எனக்கினிக்கும்

சனி, 19 டிசம்பர், 2015

சிகிச்சை

ஊசி வேண்டாம்
     வலிக்கும்
மாத்திரை
     சாப்பிட்டுக்கோனு
சீட்டு எழுதி கொடுத்தார்
     குழந்தை டாக்டர்
வாங்கி கொண்ட
     நோயாளி பொம்மைகள்

புதன், 2 டிசம்பர், 2015

பார்வை


அம்மா…….. பாருமா 
     இவன் என்னை அடிக்கின்றான் 
குரல் வந்த திசையில் திருப்பி 
     ’அடிச்சிக்காம பாத்து விளையாடுங்கள்’ 
கண் தொரியாத அம்மா சொன்னாள்

திங்கள், 30 நவம்பர், 2015

ஏன் இவர்கள் இப்படி?



எத்தனை தடவை
  அலைகள் அழைத்தாலும்
கரைகள் போவதில்லை
  கடலுக்குள்

எல்லோருக்கும்
  வழிசொல்லும்
வழிகாட்டி பலகைமட்டும்
  யாருடனும் பயணிப்பதில்லை

ஊரின் பெயர் பலகை
   வருவோரை வரவேற்றது
அதுமட்டும் ஊருக்குள்
   வரவேயில்லை
பால்ராஜன் ராஜ்குமார்