தை முதல் நாள்தானே தமிழ் புத்தாண்டு? கலைஞர், தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு என அறிவித்தது, தமிழ் அறிஞர்களின் கருத்துகளைதான் (கலைஞரின் சொந்த முடிவல்ல). தை 1 தான் தமிழ்புத்தாண்டென அறிஞர்கள் கூறுவதை படித்துவிட்டு நல்ல சிந்தனையுடன் தை புத்தாண்டை கொண்டாடி மகிழ்வோம்.
தி.மு.க. ஆட்சியை மக்கள் கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிந்தார்கள், அ.தி.மு.க. ஆட்சி வந்தது. பதவி ஏற்ற அரசு மேம்பட்ட நிர்வாக்தையும் மக்கள் நல திட்டங்களையும் தரும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் அ.தி.மு.க. அரசு தி.மு.க.வினர் மீது தீவிர நடவடிக்கையும், அதி தீவிரமாய் தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை ரத்து செய்தார்கள். அ.தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாதத்தில், மூடு விழா நடத்திய திட்டங்களில் சில;
· சமச்சீர் கல்வித் திட்டம் ஒழிப்பு
· செம்மொழி நூலகம் ஒழிப்பு
· அண்ணா பல்கலைகள் ஒழிப்பு,
· தொல்காப்பிய பூங்கா முடக்கம்,
· சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரகம் ரத்து,
· செம்மொழி பூங்கா பெயர் மறைப்பு
· முத்தமிழ் பேரவை
· மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கம்
· இலவசமாக கிடைத்த மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம் ரத்து
· அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றம்
· தை முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு’ என்ற முந்தைய அரசின் அறிவிப்பை மாற்றி ‘சித்திரை முதல்நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு’ என்று அறிவித்தது,
· சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வரும் திட்டம் ரத்து
கலைஞர் அரசு கொண்டுவந்த திட்டங்கள் என்பதற்காகவே நல்ல திட்டங்கள் எல்லாம் ரத்து செய்யப் படுகின்றது. கலைஞர் ஆரம்பித்ததை ரத்து செய்கின்றது அ.தி.மு.க அரசு. அப்படியானால், கலைஞரால் ஒழிக்கபட்டது ஆரம்பிக்க படுமோ?
கலைஞரால் ஒழிக்கப்பட்ட “கை ரிக்ஷா” மீண்டும் துவக்கப்படால், தமிழ் நாடு முழுவதும் கைரிக்ஷாதான். கை ரிக்ஷா அறிமுகத்தினால் ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பு என அரசு அறிக்கை வெளியிடலாம். அரசின் நடவடிக்கையால் மசு கட்டுபடும் (air pollution) என சில அறிவு ஜீவிகள் வரவேற்கலாம் (குழந்தைகள் நல மருத்துவமனையாகஅண்ணா நூற்றாண்டு நூலகம் மாற்றபடும் என்ற அறிவிப்பு வந்த போது, அதை வரவேற்று தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது).
Picture Courtesy: http://www.thingsasian.com/stories-photos/3426
0 கருத்துகள்:
கருத்துரையிடுக