’வாழ்க்கையில் முன்னேற முப்பது வழிகள்’, ‘ நீங்களும் சாதிக்கலாம்’, ‘வெற்றியின் திறவுகோல்’ இப்படி நிறைய சுயமுனேற்ற புத்தகங்கள் பி.சி. கணேசன் முதல் எம். எஸ். உதயமூர்த்தி எழுதியவைகளை படித்து முடித்தவுடன் நமக்கு ஒரு தெம்பு உண்டாகும். ஆனால் அந்த உற்ச்சாகம், இரண்டொரு நாளில் நாம் செய்து விடும் சின்ன ஆனால் தவிர்க்க முடிந்த நிகழ்வால் கரைந்துவிடும்.
புலிட்சர் பரிசு வென்ற, ஜோசப் டி ஹலினன் எழுதிய பிழைபாடு (Errornomics) என்ற புத்தகத்தில் தினமும் நடக்கும் தவறுகள் எப்படி நம் வாழ்வை வடிவமைக்கின்றது என்றும் தடுக்க என்ன செய்ய முடியும் என விளக்குகிறது. ‘ஏண்டா,இவனும் தானே தப்பு பண்ணினான். இப்ப என்னடான்னா, ஏதோ இவன் உத்தமன் மாதிரியும், மற்றவர்கள் மட்டுமே தப்பு பண்ணின மாதிரியும் பேசிட்டு போறான் பாரேன்’ இந்த சொல்லாடலை அடிக்கடி கேட்டிருப்போம். ஏன் நாமே நிறைய உபயோகித்திருப்போம். அப்போதொல்லாம், ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகின்றார்கள் என்று புரியாது. எனக்கு நடந்த சம்பவம் ஒன்றைச் சொன்னால் எளிதாய் புரியும் என நினைகின்றேன். தமிழக அரசு, பேருந்து கட்டணம், பால் விலை மற்றும் மின்சார கட்டணமெல்லாம் இரண்டு மடங்காக உயர்த்திய போது, எங்கள் அப்பர்ட்மெண்டில் உள்ள Mr. X சொன்னார், “விழுந்து விழுந்து அம்மாவுக்கு ஓட்டு போட்டீங்கல்ல. இப்ப நல்ல படுங்க. வேணும் உங்களுக்கெல்லாம். வந்த ஐந்து மாதத்திலேயே இந்த போடு போடுது.........ஐந்து வருசம் முடிவதற்குள் என்ன என்ன படப்போறோமோ....... கலைஞர் ஆட்சி குடும்ப ஆட்சினு சொன்னானுக. ஆனால் சாதாரண குடிமகனுக்கு எதாவது பாதிப்பு வந்ததா? யேசிக்க மாடானுக’ ஆனால் இதே Mr. X தான், தேர்தல் நேரத்தில், கலைஞருக்கு ஓட்டு போட்டால், தமிழ் நாடே காலியகிவிடும். அம்மாவுக்கு ஒட்டு போடுங்கள் என்றார். அப்பொது ஒருவர் ‘ ஏன் சார், அந்தம்மாவின் ஆட்சிதான் எவ்வளவு மோசம்னு தெரியும்ல’ னு கேட்டதற்க்கு, ‘ அம்மா, முன்னம மாதிரி இல்லை. பட்ட தோல்விகளில் திருந்திட்டாங்க’னு பதில் சொன்னார்.
இப்போது சரியான நிகழ்வைத் தான் செய்ததாய் மனம் மறுகட்டமைத்துக் கெள்ளுமாம். மனம், தனது பிழையான முடிவுகளை எடுக்கவில்லை என்று நம்பிக்கை அடையும். இது மனபிரழ்வு அல்ல. மனசாய்பு நிலைதான் என்று ஜோசப் ஹலினன் சொல்லுகின்றார்.
மனத்தின் உயர்வுசிக்கலும் (Conceit lie) பிழைகளுக்கான காரணம். எடுத்துக்காட்டாக சாதாரண மக்களின் முடிவுகள்தான் மதம், மொழி, இனம், சுற்றம் என்று சார்பு நிலையுடயதாய் (biased) இருக்கும் என்றும் நான் எடுக்கும் முடிவுகள் நடுநிலை (impartial) யாய் இருக்கும் என்ற மன பாதிப்பு நிலையிலிருப்பதாயும் சொல்லுகின்றார்.
மேலும், எதிர்மறையான பின்னூட்ட(adverse feedback)மும், மனத்தால் எளிதாய் நிராகரிக்கபடும் அல்லது பின்னுட்டமாய் எடுத்துக் கொள்ளுவதற்க்கும் அப்பாற்பட்ட விளைவை உண்டாக்கும். வீட்டில் மனைவியின் சமையல் ’நன்றாக இருக்கின்றது’ என்பதற்க்கும், ‘குறையுடையது’ என்பதற்கும் உள்ள வித்தியசம் நம்மில் பலரும் அறிவோம்.
நமது வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ, முப்பது விழுக்காடு பயனற்ற பொருட்கள் இருப்பதை ஆராய்ச்சிகள் சுட்டிகாட்டுகின்றன. இதற்க்கு காரணம், முனைப்பு (projection bias) பிழை என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒரு பொருள் (அதே மாதிரி பொருள் வீட்டில் பயனற்று இருக்கும் போதும்) வாங்க வேண்டும் என்ற முடிவுகள் அறிவால் அல்லாமல் உணர்வு உந்துதலால் எடுக்கப்படும் போதுதான் நிகழ்கின்றன.
சரி, பிழைகளை எப்படி திருத்திக் கொள்வது? ஒவ்வொரு பிழையையும் அதன் அடிப்படை காரணத்தை (root cause) ஆராய்ந்தால், செய்யும் பிழைகள் குறையும் என்கிறார் ஜோசப் ஹலினன். பிழைபாடு (Errornomics) புத்தகம், ஒரு வித்தியாசமான கோணத்தில் நிகழ்வுகளை விளக்கியுள்ளது.
புத்தகத்தின் தலைப்பு : Errornomics
ஆசிரியர் : Joseph T. Hallinan
வெளியீட்டளர் : Ebury Press, UK
0 கருத்துகள்:
கருத்துரையிடுக