ஸ்ரீவில்லிபுத்தூரின் பிரபலமான நகைவியபாரியின் மகன் கல்யாணம், அப்போது புதிதாக கட்டியிருந்த பிள்ளைமார் கல்யாண மணடபத்தில் வைத்து நடந்தது. அந்த மண்டபம் ராமகிருஷ்ணாபுரத்தில், மதுரை ரோட்டிலிருந்து பைபாஸ் ரோடு பிரிகின்ற இடத்தில் இருந்தது. ஊரிலிருந்த மண்டபங்களிலே பெரியது (இருபது வருடங்களுக்கு முன்பு). 150 பேர் ஒரே நேரத்தில் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய வசதி உடையதாய் இருந்தது. பணக்கார வீட்டு கல்யாணமென்றால் ஏழு எட்டு பந்திவரை சாப்பாடு பரிமாரப்படும். நடுத்தர வீட்டு கல்யாணத்திற்க்கு மூன்று நான்கு பந்திகள். நகைவியபாரியின் வீட்டு கல்யாணத்தில் இருபது பந்திக்கு மேல் ஊரில் பேசிக்கொண்டார்கள். ஆயிரக்கணக்கில் விருந்து சாப்பிட்டதை ஊர் மக்கள் வெகுநாட்க்களாக பேசியது எனக்கு நன்றாக ஞாபகமிருக்கின்றது. சாப்பாட்டு செலவே ஐம்பது அறுபது ஆயிரம் ரூபாயிருக்கும் என்றார்கள். இப்போதய கணக்குபடி, இரண்டு, இரண்டரை லட்சம் ரூபாய். 3000 பேர் சாப்பிடுவதர்க்கு இவ்வளவு செலவானது சரியே. செலவு மட்டுமல்ல விசயம். அதற்க்கான வேலையும் நிறைய. காய்கறி வங்குவது, அதை மண்டபத்திற்க்கு கொண்டுவந்து சேர்ப்பது, சமையல் ஆட்களை ஏற்பாடு செய்வது, சமையல் நடக்கும்போது உடன் இருந்து பார்ப்பது, பந்தி பரிமாறுவதுன்னு எகப்பட்ட வேலையிருக்கும்.
சென்னை அண்ணாநகரில் என்னுடன் வேலை பார்த்தவரின் மகளுக்கு கல்யாணம் நடந்தது. சாப்பாடு எல்லமே காண்ட்ராக்ட்டில் விட்டுவிட்டார்கள். கொஞ்சம் செலவுகூட, ஆனால் எல்லா வேலைகளையும் அவர்களே பார்த்துக் கொள்ளுவார்கள். கல்யாணவீட்டுக்காரர்கள் ப்ரீயாக இருக்கலாம். எத்தனை சாப்பாடுன்னு மட்டும் சொன்னால் போதும். அவர்களுக்கு அன்று ஆன செலவு எப்படியும் லட்சம் ரூபாய் இருக்கும்.
இவ்வளவு ஏன்?, எங்க அப்பார்மொண்டில் நடக்கும் பிறந்த நாள் விழாக்களுக்குகூட டின்னர் சாப்பாடு ஹோட்டலில் ஆர்டர் செய்தால், பார்ட்டி நடக்கும் இடத்துக்கே வந்து பரிமாறுகின்றார்கள். 25 பேர் இருந்தால்கூட பரவாயில்லை. இரண்டாயிரம் ரூபாய்க்கு பில் வரும். ஆனால் வேலை மிச்சம்.
பத்து நாட்களுக்கு முன்பு மதிய உணவு ஹோட்டலில் சாப்பிட வேண்டியதாகிவிட்டது. கே.கே. நகர் சரவண பவனில் சாப்பிட்டேன். சாதா அளவு சாப்பாடு. விலை 60 ருபாய். போதுமானதாய் இருந்தது. ருசியாகவும் இருந்தது.
சென்னையில் இன்றைய தேதிக்கு ஒரு ஆள் ஹோட்டலில் போய் சாப்பிட்டால் 60 ரூபாய் ஆகிறது. அதே மாதிரி கல்யாண விழாவில் 1000 பேர் சாப்பிட்டால் லட்சம் ரூபாய் ஆகின்றது.
ஒரு ஆளுக்கு, ஒரு நாள் சாப்பாட்டு செலவு (3 x 60 ) ரூபாய் 180. அதே நான்கு நாட்களுக்கு சாப்பாட்டுக்கு எவ்வளவு ஆகும் என்றால் ரூபாய் 720 னு கணக்கு போட்டுவிடலாம். இது என்ன ராக்கட் விஞ்ஞானமா என்ன?
அதே ஆள் நான்கு நாட்களுக்கு சாப்பிடாமலிருந்தால் என்ன செல்வாகும்? ஒன்றுமே செலவாகாதுன்னு சொன்னால், அது சரிதான். ஆனால் அன்னா ஹசாரே நான்கு நாட்கள் சாப்பிடாமல், அதாங்க உண்ணாவிரதம் இருந்தால் செலவு எவ்வளவு தெரியுமா? ரூபாய் 50 லட்சமாம். இது ராக்கட் விஞ்ஞானத்தைவிட கடினமாயிருக்கின்றது. உண்ணாவிரதத்துக்கு இவ்வளவு செலவு தேவையா? இவர் இதற்காக வசூலித்த தொகை மொத்தம் ரூபாய் 82 லட்சம். இவ்வளவு பணம் கொடுத்து யார் யாரெல்லம்னு இதுவரை அன்னா ஹசாரே செல்லவேயில்லை. ஊழலுக்கு காரணமே ஒளிவு மறைவான பரிவர்த்தனை தானே. சரி சரி அதொல்லாம் மற்றவர்களுக்குத்தானே. அன்னா ஹசாரேதான் ஊழலை ஒழிக்க பிறந்த மகான். அதனால் எதுவும சொல்ல தேவையில்லை. அவருக்குதான் சென்னை மெரினா பீச்சிலிருந்து டில்லிவரை மெழுகுவத்தி எந்திச் செல்ல ஒரு பகுத்தறிவற்ற கூட்டமிருக்கின்றதே.

2 கருத்துகள்:
அடுத்து வரும் ஜனாதிபதி அல்லது பிரதமர் தேர்தலில் அன்னா ஹசாரேயை முன்னிறுத்தி அரசியல் நடக்கும்.
நல்லாச் சொன்னீங்க.
கருத்துரையிடுக