திங்கள், 4 ஏப்ரல், 2011

உணர்வுக்கு என்ன பெயர்? (NRI)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒரு வறண்ட பூமி. தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடும் என்று சொல்லமுடியாது. அது பாட்டுக்கு தலையைவிரித்து போட்டு ஹாய்யா ஊர் முழுக்க நிதானமாய் நடந்து கொண்டிருக்கும். அவ்வளவே! வருடத்திற்க்கு பத்து மாதம் தண்ணீர் தட்டுபாடுதான். ஆனால் மக்களின் இதயங்கள் ஈரமானவை. என்னுடைய சொந்த ஊர் என்பதற்க்காக சொல்லவில்லை. மக்கள் ஆசா பாசத்துடன் பழகுவார்கள். எங்கள் தெருவில் ஒருவரை ஒருவர் மாமா, அத்தை, அண்ணே, அண்ணினு உறவுமுறை சொல்லிதான் வளர்ந்தேன். சாதியம் புரிந்து, அதில் அனேகர் வேற்று சாதி என்பது அறிந்து, அதை புறந்தள்ளி, இன்றும் உறவு முறையோடுதான் அழைத்துக்கொள்கின்றோம். எங்கள் தெருவிலிருக்கும் அம்மாக்களும் அக்காக்களும் கன்னிமார் கோவில் தெருவிலிருந்து தைக்கபட்டி தெருக்கு தண்ணீருக்காக குடம் சுமப்பார்கள். காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலமிட்டு, சமையல் செய்து, துணிதுவைப்பது போன்ற அன்றாட வேலைகள் மாதிரிதான் தண்ணீருக்கு குடம் சுமப்பதும்.

மழை காலங்களில் முதல் மழையை விட்டுவிட்டு, அடுத்த மழையிலிருந்து மொட்டைமாடியில் விழுந்து குழாயில் வரும் தண்ணீரை வாளியில் பிடித்து தண்ணீர் தொட்டியில் நிரப்புவோம். நிரப்பியபின், குழாய்க்கடியில் நாங்கள் அமர்ந்து குளிப்போம். அதுதான் எங்களுக்கு அருவி குளியல். அப்போதொல்லாம், நான் பார்த்தவரை ராஜபாளையத்திற்க்கு அருகிலிருக்கும் ‘அய்யனார் அருவி’தான் மிகப்பொரிய நீர்வீழ்ச்சி என நினைத்துக்கொண்டிருந்தேன். பள்ளியில் படிக்கும்போது, ஒரு விடுமுறையில் குடும்பத்துடன் குற்றாலம் சென்று, ஐந்தருவி, பழய குற்றாலம் அருவி, தேனருவி, புலியருவினு பார்த்து குளித்து குதூகலித்த அனுபவம் மனதில் இன்றும் நிற்க்கின்றது. பிரமிப்பும் மனதைவிட்டு நீங்கவில்லை. அய்யனார் அருவியுடன் ஒப்பிடும்போது குற்றாலத்தை பார்த்து பிரமிப்பதில் ஆச்சரியமில்லைதான். இப்போதெல்லாம், நாகர்கோவிலுக்கு போகும்போது அருகிலிருக்கும் திருபரப்பு அருவியில் நேரம் போவதே தெரியாமல் குளிப்போம். குளித்து முடித்து பசியுடன் வந்து அங்கு இருக்கும் கடைகளில் சூடான பஜ்ஜி சாப்பிட்டால் ....சுகமே சுகம்தான்.

ஒரு வினாடி, பார்த்து மலைத்துதான் போனேன். அடுத்த வினாடி, கீழே விழும் இவ்வளவு தண்ணீரும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு போனால், ஊரில் தண்ணீர் பஞ்சம் தீர்ந்து விடுமே என்ற எண்ணம் தோன்றியது. சத்தமாய் வாய்விட்டும் சொல்லிவிட்டேன். அதை கேட்ட என் மனைவியும், சுற்றியிருந்த நண்பர்கள் கூட்டமும் அடக்கமுடியாமல் சிரித்தார்கள். அதில் ஒரு நண்பன், “நயாகரா நீர்வீழ்ச்சியை பார்த்து ஊருக்கு எடுத்து சொல்ல எங்கிய உன் நினைப்பை .......”னு சொல்லி மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான். அன்று முழுவதும் நான் தான் அவர்களுக்கு காமெடி டார்கட். அதுதான் என்னுடைய அப்போதைய உணர்வு. அமெரிக்கா, நல்ல வளம் நிறைந்த நாடு, நலமான மக்கள். அங்கு இந்தியர்கள், நல்ல முறையில் வளமோடு வாழ்ந்து அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பெருமையும் பொருளும் ஈட்டுகின்றனர். ஆனால் எல்லோரும் அப்படியல்ல.

கல்லூரியில் என்னுடன் படித்தவன் இருந்த அப்பார்ட்மெண்ட் அரிசோனாவின் பினிக்ஸ் நகரின் தெற்க்கு பகுதியில் இருந்தது. நாங்களும் அதே அப்பார்ட்மெண்டில் வீடுபார்த்தது சந்தோசமாயிருந்தது. எங்கள் இருவரின் மனைவிமார்களும் எங்களுடைய் குழந்தைகளும் நெருக்கமானவர்கள். அப்போது நண்பனின் குடும்பம் அமெரிக்காவந்து நான்கு வருடங்கள் ஆகியிருந்தன. வரும்போது அவர்களின் மகனுக்கு வயது ஆறு. அதுவரை சென்னையில் சூளைமேட்டிலிருந்த பள்ளிகூடத்தில் படித்துகொண்டிருந்தான். நன்றாக வளர்ந்திருந்தான் அவர்களின் பையன், அவனுடன் பேசும்போது, அவன் பதில் சொல்லாமல் திரு திருனு முழித்துக் கொண்டிருந்தான். அதற்க்கு அவனின் அம்மா, “அவனுக்கு தமிழ் புரியாது. ஆதனால்தான் முழிக்கின்றான்” என்றார்கள். அதை கேட்ட எனக்கும் என் மனைவிக்கும் அதிர்ச்சியாயிருந்தது. ஆறு வயதுவரை தாய் மொழி பேசிய பையன், நான்கே வருடதில் தமிழ் மறக்கடிகப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியாயிருந்தது. அதை தொடர்ந்து அவர் சொன்னதை கேட்டு மனவருத்தம்தான் மிஞ்சியது. அவர், “பசங்களுக்கு புரியகூடாது அல்லது சீக்கிரட்டா பேசணும்னா நாங்க ரெண்டுபேரும், தமிழில் பேசிக்கொள்வோம்”னு அவரது கணவரை காண்பித்து சொன்னார்கள். அவரின் மாமனார், அதாவது என் நண்பனின் அப்பா, கல்லூரியில் தமிழ் ஆசிரியராய் இருந்து ஓய்வு பொற்றவர். கணவன் மனைவி இருவருக்கும் சொந்த ஊர் மதுரை. இருவருமே பட்டிமன்ற போச்சாளர் (தமிழ்) போராசிரியர் சால்மன் பாப்பயையா அவர்களின் உறவினர்கள்.

இவர்களை மட்டுமல்லாது, வேறு சில இந்தியர்களிடம் பெற்ற கமெண்ட்களும் சில இங்கு

- இந்தியாவிற்க்கு கோடைகாலத்தில் போக கூடாது, ஒரே வெயில். (இவர் அமெரிக்காவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்தியா சென்று திரும்பியபின் அடித்த கமெண்ட். சொந்த ஊர் குடிவாடா, ஆந்திரா. இவர் அமெரிக்கா போகும்முன்பு, குடிவாடா குளு குளுனு இருந்தது போலவும், இப்போது மாறிவிட்டது போலவும்தான் இருக்கின்றது)
- சேலை கட்டிக்கொண்டு எப்படித்தான் ஊரில் இருக்கின்றார்களோ?. என்ன உடை இது? (What a costume is this?). இப்படி சொன்னவர், சேலத்தை சேர்ந்தவர்.

எந்த நாட்டவனும், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற, நமது அண்டை நாட்டவரோ, ஏழை கிழக்கு ஐரோப்பிய நாட்டவனும் இப்படி சொல்ல நான் கேட்ட்தில்லை. இதை கேட்கும் போது வரும் உணர்வை, என்ன உணர்வு என்றே சொல்லத் தெரியவில்லை. வலியா? வருத்தமா? கோபமா? எரிச்சலா?, அது எல்லாம் கலந்த ஒரு உணர்வுதான் ஒவ்வொரு முறையும். அதற்க்கு காழ்புணர்வு என மாணிக்கம் அவர்கள் பெயரிட்டால், அதை எடுப்பதா? இல்லை விடுப்பதா?


[என்னுடய ‘வெளிநாட்டு வாழ் இந்தியன் (NRI)’ என்ற பதிவிற்க்கு நண்பர் மாணிக்கதின் பின்னூட்டம்:


கக்கு - மாணிக்கம்
எதன் அடிபடையில் இவைகளை எழுதினீர்கள் என்று விளக்க வேண்டும் நண்பரே. அது உங்கள் கடமையும் கூட இப்போது. வெறும் காழ்புணர்வில் மட்டுமே இதுபோல எழுத நீங்கள் தலைப்பட மாட்டர்கள் என்ற நம்பிகையுடன் கேட்கிறேன்.
நட்புடன் - மாணிக்கம் ]

3 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
நேரம் இருக்கும்போது எனது பதிவைப் படித்து பார்த்து உங்களது கருத்தை எழுதுங்கள். உங்களது பதிவில் Followers Widget இணையுங்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com
ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்
ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருமுக்குளம்
நன்றி.

Rathnavel Natarajan சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல பதிவு.
தங்கள் பதிவில் 'Followers Widget' இணையுங்கள்.
நானும் ஸ்ரீ வில்லிபுத்தூர் தான்.
நன்றி.

குலவுசனப்பிரியன் சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//சேலை கட்டிக்கொண்டு எப்படித்தான் ஊரில் இருக்கின்றார்களோ?. என்ன உடை இது? (What a costume is this?). இப்படி சொன்னவர், சேலத்தை சேர்ந்தவர். //
தமிழ்நாட்டிலேயே இப்படித்தான் கேட்கிறார்கள். வேட்டி, சேலை இடைஞ்சலான உடைதானே? பெண்கள் அவர்களுக்கு வசதியானபடி உடுத்திக்கொள்வதில் நமக்கு என்ன மனத்தடை.

அதேபோல் இந்தியாவில் வெயில் கடுமை அதிகம்தான். நான் கோவையிலிருந்தபோது சென்னை போனால் உடனடியாக வயிற்று கடுப்பு ஆகும். 2006 -ல் பங்குனி-சித்திரையில் குடும்ப திருமணத்திற்கு இந்தியா போய் இருந்தபோது, என் 4வயது மகனை பார்த்துகொள்ள வெகு சிரமமாக இருந்தது. எப்போதும் டெட்டால் பாட்டிலோடு இருப்பேன். அவனுக்கு நம் நாட்டு கழிப்பிடத்தை பாவிப்பது கடினம். தரையில் போகவிட்டு, பின்னர் இடத்தை கழுவிவிடுவேன்.

வெயிலோ, குளிரோ உடலை பேணுவது தவறில்லையே.

ஆனால் மொழி, உடை, கலாச்சாரம், பண்பாடு, உணவுமுறை போன்ற ஆளுமைகளை கேலிசெய்வது வேறு, பெரியார் போல சீர்திருத்த முயல்வது வேறு. முன்னது மனிதாபிமானமற்றது.

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்