பொய் பேசுவாயா?
’ஆம்’ என்று
சொன்னேன்.
நான் பேசுவது
உண்மையா? பொய்யா?
நம்மூரில்
புன்னகைகூட
அணியமாட்டர்கள்
விதவைகள்
மரத்தை சுமப்பதை
விதைகள்
மறந்தா போகும்
ஓடும் பேருந்திலிருந்த
பார்த்தேன்
பாதைகள் வேகமாய்
பயணித்தன
போதி மரங்கள்
இருந்தன
புத்தர்தான்
தோன்றினார்