தூணிலும்
இருப்பேன்
துரும்பிலும் இருப்பேன்
என்றான்
கடவுள்
தும்மலிலும்
இருப்பேன்
தொண்டையிலும் இருப்பேன்
என்றார் கொரோனா
மாடத்தில்
விளக்கு ஏத்த
நம்ம வீட்டில் எரிந்த விளக்கை
அண்ணைத்து
விட்டார்கள்
சத்தமா
சாப்பாட்டு தட்டை
தட்ட சொல்லி
சத்தமில்லாமல்
நம்மக்கு
திருஓட்டை தந்துசென்றார்கள்
நம்மளை கை
கழுவ சொன்ன
அரசாங்கம்
நம்மளை கை
கழுவியது
ஊரெல்லாம்
அடங்கிக்கிடந்தது
தெருவெல்லாம் முடங்கிக்கிடந்தது
சாதி வெறி முழித்தே இருந்தது
தேசிய
ஊரடங்கில் பணக்காரர்கள்
ராமாயணம் பார்த்தார்கள்
ஏழைகள்
பசியை தின்றார்கள்
வறுமையோடு
வாழ்பவர்களை
வைரஸ் சாகும்வரை
வைரசோடும்
வாழ சொன்னார்கள்
புலம்பெயர்ந்த
தொழிலாளிகள்
நடை பிணங்களாக சாலைகளில்
நாய்குட்டிகளுக்கு
விமானம்சேவை
நம்ம
வீட்டிலே இருந்தால்
கோரோனா வீதியில்
இருக்கும்
நாம்
வீதிக்கு வந்தால்
கொரோனா நம் வீட்டுக்கு வரும்